கப்டன் வதனி அவர்கள் இரணைமடுச் சந்தி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இரத்தினம் சியாமளா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜூலை 1993 அன்று யாழ். மாவட்டம் எழுதுமட்டுவாள்ப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.