2-ஆம் லெப்டினன்ட் கபில் அவர்கள் குச்சவெளி, திருகோணமலையைச் சேர்ந்தவர். சின்னராசா தேவராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஏப்ரல் 1993 அன்று யாழ். மாவட்டம் இடைக்காட்டு படைக்காவலரண்களிலிருந்து முன்னகர முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.