லெப்டினன்ட் மறைமலை (விவேகன்) அவர்கள் ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலையைச் சேர்ந்தவர். இராயப்பு அன்ரனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜூன் 1992 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூர் அரிப்புச்சந்தியில் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.