கப்டன் வேங்கையன் (ரத்தன்) அவர்கள் சின்னவத்தை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். மார்க்கண்டு யோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 1992 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் - கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளிற்கிடையே சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.