கப்டன் செந்தில் அவர்கள் கொக்குவில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்லத்துரை ஈஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஏப்ரல் 1992 அன்று யாழ். மாவட்டம் மாவிட்டபுரம் தச்சன்காட்டுச் சந்தியில் சிறிலங்கா படையினரின் காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது