மேஜர் ஜெயகரன் (சாள்ஸ்) அவர்கள் புளியம்பொக்கணை, பரந்தன், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கந்தையா ஐங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 மார்ச் 1992 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினரின் கஜபார நடவடிக்கைகெதிரான 3-ஆம் நாள் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.