லெப்டினன்ட் சுனேந்திரா அவர்கள் கல்மடு, கல்குடா, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வேலாயுதபிள்ளை ஜெயந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஆகஸ்ட் 1991 அன்று யாழ். மாவட்டம் புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.