வீரவேங்கை செபமாலை அவர்கள் 3-ஆம் வட்டாரம், பேசாலை, மன்னாரைச் சேர்ந்தவர். அலெக்சாண்டர் றூபன்குரூஸ்மெக்ஸி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.