வீரவேங்கை கில்பேட் அவர்கள் அன்புவழிபுரம், திருகோணமலையைச் சேர்ந்தவர். யோசப் ஜொனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியிலிருந்து புல்லாவெளிச் சந்தி வரை முன்னகர்ந்து சிறிலங்கா படையினர் அமைத்திருந்த சங்கிலித் தொடர் நிலைகள் மீது முள்ளியான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியிலிருந்து புல்லாவெளிச் சந்தி வரை முன்னகர்ந்து சிறிலங்கா படையினர் அமைத்திருந்த சங்கிலித் தொடர் நிலைகள் மீது முள்ளியான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலின்போது வீரச்சாவு.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது. மாவீரர்களை எமது இனவிடுதலைப் போரின் வரலாற்று நாயகர்களாக, தேசிய வீரர்களாக நாம் போற்றுகிறோம். அவர்களது நினைவுகள் காலத்தாற் கரைந்துபோகாது, என்றும் எமது நெஞ்சங்களில் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக நாம் அவர்களுக்கு நினைவு விழாக்கள் எடுக்கிறோம். நினைவுச் சின்னங்கள் நிறுவிக் கௌரவிக்கிறோம். வீர வணக்கச் சடங்குகளுடன் மாவீரர்களது வித்துடல்களை விதைப்பதும், நினைவுக் கல் நாட்டுவதும், அவர்களது கல்லறைகளைப் புனிதச் சின்னங்களாகப் பூசிப்பதும், அவர்களது துயிலும் இல்லங்களைப் புனிதத் தலங்களாக வழிபடுவதும் எமது மக்களால் விரும்பப்படும் வழக்காகிவிட்டது.