2-ஆம் லெப்டினன்ட் பழனி அவர்கள் பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அந்தோனிப்பிள்ளை அருள்தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடல் வழியாகத் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.