வீரவேங்கை தீபி அவர்கள் வங்காலை, மன்னாரைச் சேர்ந்தவர். யெரோனிமோஸ் அக்கிளிற்றஸ்லினா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஆகஸ்ட் 1986 அன்று மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.