வீரவேங்கை சுனில் அவர்கள் சிறுகுளம், பரப்பாங்கண்டல், மன்னாரைச் சேர்ந்தவர். யாக்கோப் யோசப்குருஸ் பொனடிக் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஆகஸ்ட் 1986 அன்று மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.