வீரவேங்கை ரமேஸ் அவர்கள் சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தம்பித்துரை முத்துக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு சுற்றுலா தங்ககப் படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.