வீரவேங்கை ஞானி அவர்கள் பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவசுப்பிரமணியம் கஜேந்திரமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூன் 1986 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.