வீரவேங்கை வேதா அவர்கள் கோணாங்குளம், கண்டாவளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். ஆறுமுகம் ஞானச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஏப்ரல் 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.