வீரவேங்கை வள்ளல் அவர்கள் இரத்தினபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கனகரத்தினம் குமாரச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 மார்ச் 1991 அன்று வவுனியா மாவட்டம் தாண்டிக்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.