வீரவேங்கை டெனி அவர்கள் பூவரசங்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். நாகமணி குருகுலகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 நவம்பர் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.