வீரவேங்கை மோகன் அவர்கள் தோட்டவெளி, தாராபுரம், மன்னாரைச் சேர்ந்தவர். யாக்கோப் தற்குரூஸ் அலெக்சாண்டர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஏப்ரல் 1986 அன்று கிளிநொச்சி மாவட்டம் கண்டி வீதி 18-ஆம் போர்ப் பகுதியில் சிறிலங்கா படை ஊர்தித்தொடர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.