கப்டன் ஆனந்தபாபு அவர்கள் பூவரசங்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 செப்டம்பர் 1990 அன்று யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.