வீரவேங்கை சுஜிப் (சிறி) அவர்கள் பம்பைமடு, வவுனியாவைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை சிறிரஞ்சித் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 செப்டம்பர் 1990 அன்று வவுனியா மாவட்டம் பாவற்குளம் 1-ஆம் படிவப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.