வீரவேங்கை பாபு அவர்கள் ஊறணி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஐயம்பெருமாள் ஜெயக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 செப்டம்பர் 1990 அன்று யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது