கேணல் ஐயனார் அவர்கள் திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சீவரத்தினம் துஸ்யந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஏப்ரல் 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரத்தில் சிறிலங்கா படைகளின் பாரிய முற்றுகைக்கெதிராக தீரமுடன் களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.