கப்டன் சேந்தினி (இனியவள்) (யாழ்வேங்கை) அவர்கள் நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்தவர். நடராஜா சத்தியகலா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 நவம்பர் 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.