2-ஆம் லெப்டினன்ட் வேதமணி (செட்டி) அவர்கள் இசக்கன்குளம், வட்டக்கண்டல், மன்னாரைச் சேர்ந்தவர். அப்புச்சாமி செட்டியாண்டி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஜூலை 1990 அன்று மன்னார் மாவட்டம் மாந்தைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.