கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் அவர்கள் நறுவிலிக்குளம், மன்னாரைச் சேர்ந்தவர். பர்ணாந்து சில்வெஸ்டர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1990 அன்று யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடலில் சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். மன்னார் மாவட்டத்தின் முதல் கரும்புலி மாவீரர் இவராவார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.