வீரவேங்கை நிசாம் அவர்கள் கணேசபுரம், பரப்புக்கடந்தான், மன்னாரைச் சேர்ந்தவர். பழனி மகேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜூன் 1990 அன்று மன்னார் மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் மிதிவெடியில் சிக்கி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.