லெப்.கேணல் கலையரசன் அவர்கள் அம்பனை, தெல்லிப்பழை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நற்றுணை திருவருள்செல்வன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 மார்ச் 2007 அன்று மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.