வீரவேங்கை பசுமின் அவர்கள் 3-ஆம் வாய்க்கால், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். மாடசாமி பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூன் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.