கப்டன் வினோத் அவர்கள் கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூன் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.