வீரவேங்கை சசி (சிறி) அவர்கள் ஒட்டுசுட்டான், முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வல்லிபுரம் குணபாலசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜூன் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.