வீரவேங்கை சிறி அவர்கள் முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் வரதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜூன் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது