வீரவேங்கை சர்வா அவர்கள் யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சுப்பையா குகனேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜூன் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.