லெப்.கேணல் வள்ளுவன் (நாதன்) அவர்கள் சேனைக்குடியிருப்பு, சவளக்கடை, கல்முனை, அம்பாறையைச் சேர்ந்தவர். பூபாலப்பிள்ளை குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 மே 2001 அன்று அம்பாறை மாவட்டம் பாணமைப்பற்றுப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.