லெப்டினன்ட் மலரினி (சோபா) அவர்கள் பாரதிபுரம் கிழக்கு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சோமஸ்காந்தன் சசிகலா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.