எல்லைப்படை வீரர் வீரவேங்கை புவனேஸ்வரன் அவர்கள் வட்டக்கண்டல், மடு, மன்னாரைச் சேர்ந்தவர். முத்துராசா புவனேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 2001 அன்று யாழ். மாவட்டம் எழுதுமட்டுவாள்ப் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.