லெப்டினன்ட் தமிழையன் அவர்கள் கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவப்பிரகாசம் லக்சுமிகாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 மார்ச் 2001 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய்ப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.