கப்டன் சர்மினி அவர்கள் பேத்தாழை, வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். எட்வேட் ஜெயகுமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 நவம்பர் 2000 அன்று முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்றுப் பகுதியில் சிறிலங்கா வான் படையின் “மிக் 27” வானூர்தி மேற்கொண்ட குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.