வீரவேங்கை தமிழ்மொழி அவர்கள் உதயநகர், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். தேவராசா சிறிரஞ்சினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 அக்டோபர் 2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.