2-ஆம் லெப்டினன்ட் சிவம் அவர்கள் கள்ளிமோட்டை, முருங்கன், மன்னாரைச் சேர்ந்தவர். ஆபிரகாம் முருகையா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 மே 1989 அன்று வவுனியா மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் புளொட் கும்பலின் முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.