மேஜர் சிவப்பிரகாசம் (ராஜா) அவர்கள் சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். விநாயகரத்தினம் கெங்காதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஆகஸ்ட் 1999 அன்று அம்பாறை மாவட்டம் 13-ஆம் கொலனிப் பகுதியில் இருந்து முன்னேறிய சிறப்பு அதிரடிப்படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.