கப்டன் வெற்றிச்செல்வி அவர்கள் சமயபுரம், வவுனியாவைச் சேர்ந்தவர். பரமு வசந்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜனவரி 1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.