கப்டன் செங்கண்ணன் அவர்கள் களுவன்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சண்முகம் சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 நவம்பர் 1998 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.