கப்டன் பவளரட்ணம் அவர்கள் வந்தாறுமூலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். யோசப் கணேஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 நவம்பர் 1998 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.