வீரவேங்கை சுடர்த்தமிழ் அவர்கள் எழுதுமட்டுவாள் தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பொன்னுத்துரை தயாளினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 செப்டம்பர் 1998 அன்று கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 02 நடவடிக்கையின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.