2-ஆம் லெப்டினன்ட் விஸ்வநாதன் அவர்கள் பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வடிவேல் மோகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 செப்டம்பர் 1998 அன்று கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 02 நடவடிக்கையின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.