வீரவேங்கை சுடர் (கணேஸ்) அவர்கள் தாழ்வாடு, மன்னாரைச் சேர்ந்தவர். நீக்கிலாஸ் சுதாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 பிப்ரவரி 1998 அன்று கிளிநொச்சி - பரந்தன் படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.