வீரவேங்கை ரவிகாந் (ரவிக்குமார்) அவர்கள் பாப்பாமோட்டை, மாந்தை, மன்னாரைச் சேர்ந்தவர். அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 அக்டோபர் 1988 அன்று வவுனியா மாவட்டம் சொந்தக்காரன்குளப் பகுதியில் இந்தியப் படையினர் மற்றும் தேசவிரோதிகள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.