கரும்புலி கப்டன் தனா அவர்கள் கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பெருமாள் கலைநிதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 பிப்ரவரி 1998 அன்று கிளிநொச்சி - பரந்தன் - ஆனையிறவு படைத்தளப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.