லெப்டினன்ட் பீற்றர் அவர்கள் கர்த்தர்கோயிலடி, பரப்புக்கடந்தான், மன்னாரைச் சேர்ந்தவர். மனுவேல் யோகராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 அக்டோபர் 1988 அன்று வவுனியா மாவட்டம் சொந்தக்காரன்குளப் பகுதியில் இந்தியப் படையினர் மற்றும் தேசவிரோதிகள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.