மேஜர் தாடிபாலா அவர்கள் ஆனந்தர்புளியங்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். சண்முகம் இராசரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 அக்டோபர் 1988 அன்று வவுனியா மாவட்டம் சொந்தக்காரன்குளப் பகுதியில் இந்தியப் படையினர் மற்றும் தேசவிரோதிகள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.